என்னைப் பற்றி!கிரி என்கிற நான்...

பிறந்தது கிருஷ்ணகிரியில். வளர்ந்தது கிட்டத்தட்ட தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்கள் அனைத்திலும். தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், புதுவை என பால்ய பிராயம் கழிந்தது. 1990’ல் இருந்து சென்னை வாசியானேன். இருபது வருடங்களை வடசென்னையின் மாதவரத்தில் கழித்துவிட்டு இப்போது சமீபத்தில் மடிப்பாக்கத்திற்கு ஜாகை நகர்ந்துள்ளது.

திருமணமாகி ஒன்றரை வயதில் மகன் இருக்கிறான்.
மேல்நிலைப்பள்ளிப் படிப்பு மாதவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தேறியது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல்வழியில் வணிகவியல் பட்டம் கிடைத்தது.

பட்டம் படித்தவாறே ஃபேன்சி ஸ்டோர் ஒன்றில் விற்பனைப் பையன் வேலை பார்க்கத்  தொடங்கி, லெதர் கம்பெனியில் மெஷின் ஓட்டி, வணிகவரி கணக்காளரிடம் உதவியாளனாய் இருந்து,  சிமெண்டுக் கடையில் கணக்கு எழுதி, மென்பொருள் நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராகி,  கில்லெட் பிளேடு கம்பெனியின் டெப்போவில் சூபர்வைசர் பணி புரிந்து, தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் அக்கவுண்டன்ட் வேலை பார்த்துவிட்டு......

.....இன்று உலகின் முன்னணி  பி.பீ. ஒன்றில் துணை மேலாளராக இருக்கிறேன். இதுதான் என career graph.மார்ச் 2011’ல் நான் எழுதிய கார்பரேட் கனவுகள் புத்தகம் வெளிவந்திருக்கிறது.
பி.பீ.ஓ. துறை பற்றிய புத்தகம்.

எழுத்து என் தவம், சிறுவயது முதல்நெஞ்சில் நின்ற லட்சியம் என்றெல்லாம் சொல்லமாட்டேன். இசை என் கனவாக இருந்தது, இருக்கிறது. அம்மா தந்த மரபணுப் புண்ணியத்தில் கொஞ்சம் சுமாராய்ப் பாடுவேன். தமிழின் எல்லா முன்னணித் தொலைக்காட்சிகளிலும் என் குரல் ஒலித்திருக்கிறது. சூப்பர் சிங்கர், ராஜகீதம் நிகழ்ச்சிகளில் ஓரிரு ரவுண்டுகள் பாடியிருக்கிறேன். என் வட்டத்தில் நான்தான் சூப்பர் சிங்கர். சிறுவட்டம் தாண்டி பெருவட்டத்தில் என் குரல் ஒலிக்கக் கனவு கண்டவாறே இருக்கிறேன்.

சின்ன வயது முதலே படிப்பது முக்கியப் பொழுது போக்கு. இரண்டாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து கோகுலம், பூந்தளிர் புரட்டிவிட்டு, நான்கு ஐந்து வகுப்புகளில் விகடன் குமுதம் என்று வளர்ந்து எட்டாம் வகுப்பு படித்த பருவத்தில் பி.கே.பி. நாவல் வாசிக்கத் துவங்கினேன்.

படித்தது தமிழ் வழியில் என்பதால் அது ஓரளவு பிழையின்றி தமிழ் எழுத கூடுதல் பலமாயிற்று. இலக்கண இலக்கியங்களை நான் அறியேன். எங்கேனும் ஏதேனும் நான் சுமாராக சுவாரசியமாக எழுதினால் அது யாரோ முன்னோர் தந்த பிட்சம்.

13 comments:

cheena (சீனா) said...

ஆகா ஆகா அருமையான் அறிமுகம் -ம் பையன் ஏப்ரல் 2010ல் பிறந்ததை வைத்து கல்யாணம் ஆனதைக் கன்ஃபர்ம் செய்யும் சிறந்த உத்தி வாழ்க.

Rathnavel said...

Congratulations & Blessings.

"ஸஸரிரி" கிரி said...

@ ரத்னவேல் அவர்களுக்கு

தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

tamilthathuvarasigan said...

wonderful blog.

Regards,
http://tamilthathuvarasigan.wordpress.com/

SRI VENUGOPALAN said...

corporate kanavugal engey kidaikum?
cgisiva@gmail.com

கிரி ராமசுப்ரமணியன் said...

@ ஸ்ரீ வேணுகோபாலன்
தங்கள் ஆர்வத்திற்கு மிக்க நன்றி. இந்த லிங்கில் நீங்கள் கேட்ட தகவல் உள்ளது. < கார்பரேட் கனவுகள் புத்தகம் வாங்க >

மேலும் உதவிக்கு rsgiri gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

tamilthathuvarasigan said...

wonderful blog...

Regards
Tamil
{http://tamilthathuvarasigan.wordpress.com/}

மோகன் குமார் said...

எதேச்சையாக உங்கள் ப்ளாக் லிங்க் கிடைத்தது. நான் மோகன் குமார். வீடு திரும்பல் என்கிற ப்ளாகில் எழுதி வருகிறேன்.
நமக்குள் சில ஒற்றுமைகள் ஆச்சரியப்பட வைக்கிறது. நானும் மடிப்பாக்கம் தான். மேலும் சென்னையில் ஒரு பீ பி ஒ நிறுவனத்தில் சட்ட துறையில் மேலாளராக உள்ளேன். முடிந்தால் snehamohankumar@yahoo.co.in என்கிற என் மெயில் ஐ. டி க்கு தொடர்பு கொள்ளுங்கள்

நாம் தொடர்பில் இருப்போம்

Anonymous said...

Good career graph.

But

ஆனால் இப்படி எழுதுவது சரியில்லை:
//ஏப்ரல் 2010'ல் பையன் பிறந்திருக்கிறான். ஆகவே அதை நிர்ணயிக்கும் வண்ணம் அதற்கு முன்னமே கல்யாணம் ஆகிவிட்டது.//
திருமணம் என்பது குழந்தைகள் என்பதால் என்பது உண்மையென்றாலும், அஃது குழந்தைகள் வந்தாலும் வராவிட்டாலும் என்று இருக்கும்போது தாழ்வாவதில்லை.
உங்களது வரிகள் குழந்தைப்பேறில்லா தம்பதியர்களின் மனங்களைப் புண்படுத்தலாம்.
எனக்கு குழந்தைகள் இருப்பினும். எவரிடமும் உங்களுக்கு எத்தனை குழந்தைகள் ? என்று கேட்பதே இல்லை. ஒருவேளை அவர்கள் திருமணமாகி பல்லாண்டுகள் குழந்தைப் பேறுக்காக ஏங்கி வாழ்ந்து வருபவர்களெனில்...?

Giri Ramasubramanian said...

@ அனானி

நன்றி. மாற்றி எழுதியிருக்கிறேன்.

Anonymous said...

கிரி, Blog அட்டகாசமா இருக்கு ... தூள் கிளப்புங்க ...

Thamizh said...

Thangal valiba vayadhil payinatha perundhil padiya "varadha nadhikarai oram" endra padalai ketu rasithu nanum ungaludan serndhu padiya ungalin rasiga nanban (170A last seat). Indru than vigadanil thangaludaya "valaiyosai" pagudhiyil ungaludaya pagudhiyai padithen. Thangaluku nyabagam varuvatharku ku thuli... "Meenakshi meenakshi annan kadhal enachi". Ennal ungalai thodarbukolla iyalavillai thangaluku nyabagam irundhal thodarbukollavum.
Ippadiku Chandhru.
Ph no: 9962932212, 7401369510.

Gnanam Sekar said...

அறிமுகம் . அருமை

Related Posts Plugin for WordPress, Blogger...